மைனர் பெண்ணை கற்பழித்த தந்தையின் நண்பருக்கு 10 ஆண்டு ஜெயில்

மும்பையை சேர்ந்த 16 வயது மைனர் பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் மைனர் பெண்ணின் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.

Update: 2018-02-10 21:30 GMT

மும்பை,

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அவளது தந்தையின் நண்பர் மிரட்டி கற்பழித்தார். இந்த நிலைவில் வீடு திரும்பிய பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து மைனர் பெண் கதறி அழுதபடி தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையின் நண்பரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

விசாரணையில் தந்தையின் நண்பர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை கற்பழித்த தந்தையின் நண்பருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்