கிணத்துக்கடவு, வடவள்ளி பகுதியில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது; 57½ பவுன் நகைகள் பறிமுதல்

கிணத்துக்கடவு, வடவள்ளி பகுதிகளில் வீடுபுகுந்து திருடிய 3 பேரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 57½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.;

Update: 2018-02-10 22:45 GMT
கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு பகுதிகளில் கடந்த 2016-2017-ம் ஆண்டுகளில் கிணத்துக்கடவு, பகவதிபாளையம், சொலவம்பாளையம், காரச்சேரி, வடவள்ளி ஆகியபகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடிசென்ற கும்பல் நீண்டநாட்களாக போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்து வந்தனர். இந்த தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகளை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரெண்டுமூர்த்தி உத்தரவிட்டார். இதனையடுத்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க பேரூர் போலீஸ் துணைசூப்பிரெண்டு வேல்முருகன் உத்தரவின்பேரில் கிணத்துக்கடவு (பொறுப்பு)இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், கிணத்துக்கடவு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் ஷாஜகான், தலைமைகாவலர்கள் ரஞ்சித்குமார், பாலகிருஷ்ணன்ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படைகள் வீடு புகுந்து திருடும் கும்பலை பிடிக்க தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை கிணத்துக்கடவு ரெயில் நிலைய ரோட்டில் பொள்ளாச்சி ஒக்கிலிபாளையம் பகுதியைசேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தகுமார் (வயது 32), தனது ஆட்டோவில் வடசித்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு ரோட்டோரம் நின்ற 3 பேரில் ஒருவர் தனக்கு உடல் நலம்சரியில்லை அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்று கூறிவிட்டு ஆட்டோவில் ஏறியதும், மற்றொருவன் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தராஜிடம் இருந்த ரூ.1000, மற்றும் ஒரு கை கடிகாரத்தையும் பறித்துசென்றனர். இது குறித்துஆனந்தராஜ் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இதனைதொடர்ந்து கிணத்துக்கடவில் முள்ளுப்பாடிரெயில்வேகேட் பகுதியில் போலீசார்ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் 3 நபர்கள் ஓட்டம்பிடித்தனர்.போலீசார் அந்தநபர் களை விரட்டி சென்றுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒத்தையூர் பகுதியைசேர்ந்த கருப்புச்சாமி என்கிற வெட்டிகருப்புச்சாமி (50),ஒத்தையூர் அரண்மணைவலசு பகுதியைசேர்ந்த ராமசாமி (56), ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி சமத்துவபுரத்தைசேர்ந்த ராசு என்கிற கருப்புசாமி (65)என்பதும் தெரியவந்தது. மேலும்போலீசார் பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 3 பேரும் ஏற்கனவே கிணத்துக்கடவு, கோவை வடவள்ளி பகுதியில் 5 இடங்களிலும் பூட்டி இருந்தவீட்டிற்குள் புகுந்து 57½ பவுன் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். வீடுகளில் திருடிய 57 ½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் 3 பேரையும் பொள்ளாச்சி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 பேரும் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் 3பேரும் சேர்ந்து மதுவாங்கி குடிப்போம். சூதாட்டம், சேவல் சண்டைக்கு செல்வோம். கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியில் ஒருவீட்டில் நகைதி திருடிய வழக்கில் கைதாகி காரைக்குடி ஜெயிலில் 1½ ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து பின்னர் வெளியேவந்தோம். இதனை தொடர்ந்து சூலூர், பல்லடம் பகுதியில் கைவரிசை காட்டி போலீசில் சிக்கி 8 மாதங்கள் சிறையில் இருந்தோம். பின்னர் வெளியே வந்து மீண்டும் கிணத்துக்கடவு , கோவை வடவள்ளி ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டில்ள ஆட்கள் இல்லாத நேரத்தில் புகுந்து நகைகளைதிருடி பழனி காந்திமார்க்கெட் ரோட்டில் உள்ள நகைபட்டறையில் கொடுத்து பணம்பெற்று அந்தபணத்தை 3 பேரும் பிரித்துகொண்டோம். மீண்டும் கிணத்துக்கடவில் ஆட்டோடிரைவரிடம் பணம் ,கை கடிகாரத்தை பறித்து ஊருக்கு திரும்பிசெல்ல முள்ளுப்பாடி ரெயில்வேகேட்பகுதிக்கு வந்தபோது சிக்கிக்கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்