மாமல்லபுரம் அருகே உணவகத்தில் கார் புகுந்து வாலிபர் சாவு
மாமல்லபுரம் அருகே உணவகத்தில் கார் புகுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றத்திற்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரணை என்ற இடத்தில் செல்லும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஒரு உணவகத்தில் புகுந்தது.
இதில் அங்கு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 32), அவரது நண்பர் வீரராகவன் (35) ஆகியோர் காயம் அடைந்தனர். காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். செல்லும் வழியில் கஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். வீரராகவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூலித்தொழிலாளியான கஜேந்திரனுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மாமல்லபுரம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.