மதுக்கடை அருகே தண்ணீர் பாக்கெட் விற்பதில் தகராறு; ஒருவர் கைது

மதுக்கடை அருகே தண்ணீர் பாக்கெட் விற்பதில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-10 21:30 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமம் சீத்தஞ்சேரி சாலையில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த கடையின் எதிரே முருகம்மாள் (வயது 39) மற்றும் சிவசங்கர் (52) தண்ணீர் பாக்கெட், கிளாஸ் விற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை விற்பனை செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சிவசங்கருக்கு அவரது மனைவி திருமலை (45), மகன் பிரவீன், மகள் பிரியா ஆகியோரும், முருகம்மாளுக்கு ஆதரவாக அவரது கணவர் ராமு, அண்ணன் கணேசன், அண்ணி யசோதா ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

இதில், முருகம்மாள் படுகாயம் அடைந்து மயங்கினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் முருகம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சிவசங்கரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்