நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெறக்கோரி நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-10 22:45 GMT
நாகர்கோவில்,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணியான பெண்கள் இந்தியா அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெண்கள் இந்தியா அமைப்பு மாவட்ட தலைவர் நபீலா அன்சார் தலைமை தாங்கினார். பொருளாளர் பாமிலா, மாநில துணை தலைவர் பாத்திமா கனி, செயற்குழு உறுப்பினர்கள் ஹபீபா, ரஹ்மத் நிஷா மற்றும் மனூக்பா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மாகீன், இஸ்லாமிய கலாசார கழக தலைமை இமாம் சவுகத்அலி மற்றும் முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டனர்.

அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா அறிவுறுத்தியதை தொடர்ந்து, குழந்தைகள் ஓரமாக நிழலில் உட்கார வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்