அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்
திருநின்றவூரில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ்நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் சிறப்பு வாய்ந்த பெருமாள் கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளும் உள்ளன. திருநின்றவூரை சுற்றியுள்ள கொட்டாமேடு, கொசவன்பாளையம், பாக்கம், நத்தமேடு, நடுக்குத்தகை, பாலவேடு, அருந்ததிபாளையம், திருநின்றவூர் கோமதிபுரம், லட்சுமிபுரம், அந்தோணி நகர், பெரியார் நகர், சுதேசி நகர், முத்தமிழ் நகர், ராமதாசபுரம், பெரியகாலனி, முருகேசநகர், பாலாஜி நகர், கொரட்டூர் புதுச்சத்திரம், கசுவா, காவனூர், புலியூர், வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநின்றவூர் வந்து பஸ் பிடித்து வேலைக்கும், கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்கின்றனர்.
பிராட்வே செல்லக்கூடியவர்கள் சி.டி.எச். சாலையில் காந்தி சிலை அருகே நின்று பஸ் ஏறி செல்கின்றனர். பூந்தமல்லி செல்லக்கூடியவர்கள் திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே நிற்கும் பஸ்சில் ஏறி செல்கின்றனர். பொதுமக்கள் வசதிக்காக பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து தற்காலிகமாக திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் காந்தி சிலை அருகே ஏற்கனவே கழிவு நீருடன் சேறும் சகதியுமாக இருந்த இடமான திருநின்றவூர் போலீஸ் பூத் இருந்த அரசு நிலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிகமாக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்ட அந்த இடத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை நிழற்குடை இல்லை. கழிவறை வசதி இல்லை. பெரும்பாலும் தனியார் வாகனங்கள் தான் அங்கு ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் அரசு பஸ் வந்து செல்ல போதிய இடம் இல்லை.
அந்த இடத்தில் 2 நேரக்காப்பாளர்கள் உள்ளனர். எந்த வித அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தி தரவில்லை. திருநின்றவூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.