நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நெல்லை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெல்லையில் ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விசுவாசம் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அருணாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ட ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோஷம்
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகிகள் பரமசிவன், நல்லபெருமாள், கிருஷ்ணன், சீதாராமன், முத்துச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் நக்கீரன், பொதுத்துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரராஜ் மற்றும் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.