பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் சாலைமறியல் 197 பேர் கைது
பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 197 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 197 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலைமறியல்
கடந்த 2016–2017–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும். காப்பீடு தொகையை வழங்காமல் காலதாமதம் செய்யும் காப்பீட்டு நிறுவனம் மீதும், பயிர் காப்பீட்டில் முறைகேடு செய்தவர்கள் மீதும் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலையில் கோவில்பட்டி பயணியர் விடுதியில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லாபாய் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஊர்வலமாக சென்ற விவசாயிகளை கோவில்பட்டி மெயின் ரோடு ராஜமீரா கோல்டு சந்திப்பு பகுதியில் வழிமறித்தனர். உடனே விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சில விவசாயிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தார் சாலையில் படுத்தவாறு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
197 பேர் கைது
சங்க மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராமையா, மாநில பொதுச்செயலாளர் துரை மாணிக்கம், இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாலமுருகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்பட 197 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
பேச்சுவார்த்தை
தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தாசில்தார் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும். இல்லையெனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர்.
தொடர்ந்து மதியம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், தனியார் மண்டபத்துக்கு சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.