சத்துவாச்சாரியில் சாலை கெங்கையம்மன், பொன்னியம்மன் கோவில் தேர்கள் எரிந்தன
வேலூர் சத்துவாச்சாரியில் சாலை கெங்கையம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் தேர்கள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வேலூர்,
தீ விபத்துக்கு சதிவேலை காரணமா? என்பது குறித்து தடயவியல் அதிகாரி ஆய்வுசெய்தார்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள விஜயராகவபுரத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாலை கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 27 அடி உயரத்தில் தேர்செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடக்கும் திருவிழாவின்போது தேரோட்டம் நடக்கும். பின்னர் கோவிலின் பின்புறத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தேர் நிறுத்தி வைக்கப்படும்.
அதேபோன்று பாலாற்றங்கரையில் கிராம தேவதையாக விளங்கும் பொன்னியம்மன் கோவிலுக்கு சொந்தமான 17 அடி உயர தேரும், சாலை கெங்கையம்மன் கோவில் தேர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவின்போது தேரோட்டம் நடக்கும். பின்னர் சாலை கெங்கையம்மன் கோவில் தேர் அருகில் நிறுத்தி வைக்கப்படுகிறது. சாலை கெங்கையம்மன் கோவில் தேர் இரும்பு தகடுகளாலும், பொன்னியம்மன் கோவில் தேர் ஓலைக்கூரைகளாலும் மூடிவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு மேல் பொன்னியம்மன் கோவில் தேரில் தீப்பிடித்துள்ளது. ஓலைக்கூரையால் மூடப்படிருந்ததால் தீ மளமளவென பரவியது. அப்போது அருகில் நிறுத்தப்பட்டுள்ள சாலை கெங்கையம்மன் கோவில் தேருக்கும் தீ பரவியது. அதே நேரத்தில் அந்தவழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர், தேர் தீப்பிடித்து எரிவதை பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இது குறித்த தகவல் அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவரவே அவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு விரைந்து வந்து அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பொன்னியம்மன் கோவில் தேர் முழுவதும் எரிந்து விட்டது. சாலை கெங்கையம்மன் கோவில் தேரின் உச்சிப்பகுதி சுமார் 5 அடி உயரத்திற்கு எரிந்து விட்டது. கீழ்பகுதி இரும்பு தகடால் மூடப்பட்டிருந்ததால் அந்த பகுதி எரியாமல் தப்பியது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயஅறிவியல்துறை துணை இயக்குனர் விஜய் சம்பவ இடத்திற்கு சென்று தேர்கள் எரிந்த பகுதிகளை ஆய்வுசெய்தார்.
அப்போது எரிந்து கிடந்த தேரின் சில பகுதிகளை அவர் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச்சென்றார். சதிவேலை காரணமாக தீ வைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் இதற்கு காரணமா என்பது குறித்து ஆய்வுசெய்வதற்காக தீயில் எரிந்த தேரின் சில பகுதிகளை அவர் சேகரித்து சென்றுள்ளார்.