குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
திருவண்ணாமலையை அடுத்த நாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மனைவி கருப்பாயி என்ற பாக்கியம் (வயது 49).;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் தொடர்ந்து சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால், பாக்கியத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பாக்கியத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.