பிவண்டியில் கத்திமுனையில் இளம்பெண் கற்பழிப்பு 3 பேர் கைது
பிவண்டியில் கத்திமுனையில் இளம்பெண்ணை கற்பழித்த வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தானே,
அவர்களில் இம்ரான்கான் இளம்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் அவர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை கற்பழித்து உள்ளார்.
அவரது நண்பர்கள் இருவரும் யாரும் வந்தால் தகவல்கொடுப்பதற்காக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்து உள்ளனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து சாந்திநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.