கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள இடங்களில் கூடுதல் ரேஷன்கடைகளை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினார்.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் அதிக குடும்ப அட்டைகளை கொண்ட ரேஷன்கடைகளை பிரித்து பகுதிநேர ரேஷன்கடைகளை உருவாக்குவது தொடர்பாக அதிகாரிகள் பங்கேற்ற ஆலேசானைக்கூட்டம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி ஆலோசனை நடத்தினார். இதில் கலெக்டர் விவேகானந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சந்தானம், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அமிர்துல்லா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அதிக குடும்ப அட்டைகளை கொண்ட ரேஷன்கடைகளை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு இடங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்தி அதிக குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன்கடைகளை பிரித்து பகுதிநேர ரேஷன்கடைகளை அமைக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். கூடுதலாக ரேஷன்கடைகள் அமைக்க தகுதியுள்ள இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளில் புதிய ரேஷன்கடைகளை அமைக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர் விடுதியினை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
பாலக்கோட்டில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய கட்டிடம் கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்தும் பாலிடெக்னிக் கல்லூரியில் தற்போது ரூ.19 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2,000 மட்டும் கட்டணமாக பெறப்படுகிறது. தற்போது பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்தும் பாலிடெக்னிக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் ரூ.2,000 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானதாகும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த விழாவில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமிர்பாஷா, சர்க்கரை ஆலைத்தலைவர் ரங்கநாதன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.