அரசு மருத்துவக்கல்லூரி மாணவர், விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கினார்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர், விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். சிற்ப கலைஞரான இவருக்கு சுந்தரவேல் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். இதில் சுந்தரவேல், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவர் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் கல்லூரி விடுதி அறையை விட்டு சுந்தரவேல் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய நண்பர்கள் அவரது அறைக்கு சென்று கதவை தட்டிப்பார்த்தனர்.
நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது சுந்தரவேல், அறையில் உள்ள மின் விசிறியில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கிய மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் சுந்தரவேல் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த சக மாணவர்கள், மருத்துவமனை முன்பு திரண்டனர். மருத்துவக்கல்லூரியில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என்பதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக சுந்தரவேல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவக்கல்லூரி மாணவர், விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.