தாமிரபரணி ஆற்றில் குளித்தவர்களிடம் செல்போன்கள் திருடிய கும்பல் சிக்கியது 4 பேர் கைது-50 செல்போன்கள் மீட்பு
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தவர்களிடம் செல்போன்களை திருடிய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தவர்களிடம் செல்போன்களை திருடிய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செல்போன் திருட்டு
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்பவர்கள் தங்கள் செல்போன்களை கரையில் வைத்து விட்டு குளிக்கும் போது அதனை ஒரு கும்பல் திருடி வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன.
இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவுப்படி தாழையூத்து துணை சூப்பிரண்டு பொன்னரசு மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தையா, ஏட்டுகள் கருணா சாமுவேல், வேல்பாண்டி, சுதாகர், பிச்சைகண்ணு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறை பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விலை உயர்ந்த செல்போன்கள்
இதில் நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் தாமிரபரணி ஆறு படித்துறையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர் அம்பை அருகே உள்ள கோடாரங்குளத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜ்குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும் ராஜ்குமார் தலைமையில் செல்போன்களை திருடும் கும்பல் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடமாடியது தெரியவந்தது.
இவர்கள் ஆற்றில் குளிப்பவர்களிடம் விலை உயர்ந்த செல்போன்களை மட்டும் குறிவைத்து திருடி வந்து உள்ளனர். மேலும் சாலையோரங்களில் நிறுத்தப்படும் லாரிகள் மற்றும் வாகனங்களில் இருந்து பேட்டரிகளை திருடியதும் தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய கூட்டாளிகள் சிவந்திபுரத்தை சேர்ந்த காசி மகன் சக்தி (27), ராஜா மகன் தனசிங் (25), ராஜாமணி மகன் தினகரன் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒரு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ஏராளமான பேட்டரிகளை போலீசார் மீட்டனர். அவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. இந்த கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் குளித்தவர்களிடம் செல்போன்கள் திருடிய கும்பல் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.