மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-02-09 23:00 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெல்லி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்பை மீறி அங்கு கடை திறக்கப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் நேற்று சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கடையை அகற்றவேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்