நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் காத்திருப்பு போராட்டம்
நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,

காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட கிளை சார்பில் நெல்லை டவுனில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரம்மநாயகம், ரமேஷ், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது மாறுதலுக்கு பின் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை கடந்த காலங்களை போல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்க வேண்டும். 8-வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியத்துக்குரிய முழு பலன்களையும் வழங்க வேண்டும்.
அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர் வழங்கி அதை இயக்கிட பணியாளர்களை நியமிக்க வேண்டும். கற்பித்தல் பணியை பாதிக்கும் வகையில் ஆசிரியர்களை கொண்டு புள்ளி விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மறியல் போராட்டம்
தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முருகேசன், பிச்சைக்கனி, கணேசன், பால்துரை, சுப்பு, பார்த்தசாரதி ஆகியோர் பேசினர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் பால்ராஜ் கூறும்போது, ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் சட்டசபை கூட்டம் நடக்கும் 21-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்“ என்றார். இந்த போராட்டம் மாலை வரை நடந்தது. இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.