தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் பொரிப்பகத்தில் இருந்து 123 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
தனுஷ்கோடி எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் உள்ள பொரிப்பகத்தில் இருந்து 123 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.;
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சை ஆமை,சித்தாமை,பெருந்தலைஆமை,தோணி ஆமை, என பல வகை கடல் ஆமைகள் உள்ளன. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இதற்காக பெண் ஆமைகள் கடற்கரைக்கு வந்து மணலில் குழிதோண்டி முட்டையிட்டு செல்லும். பின்னர் முட்டைகளில் இருந்து பொரித்து குஞ்சுகள் தானாக வெளியே வந்து கடற்கரை வழியாக ஊர்ந்து கடல் நீரில் நீந்தி ஆழ் கடலை நோக்கி சென்று விடும்.
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் எம்.ஆர்.சத்திரம்,கோரி,கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 மாதத்தில் ஆமைகள் இட்டு சென்ற சுமார் 3,586 ஆமை முட்டைகள் வனத்துறையின் மூலம் பாது காப்பாக சேகரிக்கப்பட்டு எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதில் நேற்று 123 முட்டைகளில் இருந்து 123 ஆமை குஞ்சுகள் பொரித்து தானாக வெளியே வந்தன. இது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார், மண்டபம் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் அனைத்து ஆமை குஞ்சுகளையும் வன உயரின காப்பாளர் மற்றும் வனச்சரகர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் இணைந்து ஆமை குஞ்சுகளை கடலில் விடுவதற்காக கடற்கரை மணல் பரப்பில் விட்டனர். சிறிது நேரத்தில் அனைத்து ஆமை குஞ்சுகளும் மணல் பரப்பில் மெதுவாக ஊர்ந்தபடி சென்று தனுஷ்கோடி கடலில் நீரில் நீந்தி ஆழமான பகுதியை நோக்கி சென்றன.
இது பற்றி வனஉயிரின காப்பாளர் அசோக்குமார் கூறியதாவது:-
தமிழகத்திலேயே ஆமைகள் முட்டையிடுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தனுஷ்கோடி. கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 19 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டு 18 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.அதில் தனுஷ்கோடி கடலில் மட்டும் 12 ஆயிரம் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தனுஷ்கோடி பகுதியில் மட்டும் 3,586 ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டன.இதில் முதல் கட்டமாக 123 குஞ்சுகள் பொரிக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன. ஆமைகள் அழிவில் இருந்து காக்க மீனவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.