தாக்குதல் நடத்துவது, பொருட்களை பறிப்பது சரியல்ல: ‘மக்களை பாதுகாப்பதே போலீஸ்காரர்களின் கடமை’ - ஜி.ராமகிருஷ்ணன்
மக்களை பாதுகாப்பதே போலீஸ்காரர்களின் கடமை என்று திருப்புவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் கடந்த மாதம் 16-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிவகங்கை மாவட்ட செயலாளர் கந்தசாமியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் தாக்கினர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் மாவட்ட செயலாளர் கந்தசாமி மீது தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்களை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:-
கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் கந்த சாமி திருப்புவனத்தில் காய் கறிகள் வாங்கிக்கொண்டிருந்த போது, வியாபாரிகளின் காய்கறியை சேதப்படுத்திய போலீஸ்காரர்களை அவர் தட்டிக்கேட்டார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சேர்ந்து கந்தசாமியை தாக்கியுள்ளனர். தவறு நடப்பதை தட்டிக்கேட்ட கந்தசாமியை பாராட்டி வரவேற்கிறேன். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் 2 பேரும் சேர்ந்து ரூ.1½ லட்சம் பெற்று லஞ்ச புகாரில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். போலீஸ்காரர்கள் மக்களை பாதுகாக்கவே தவிர அவர்களை தாக்குவதற்கோ, பொருட்களை பறிமுதல் செய்வதற்கோ அல்ல. அதையும் மீறி தாக்குதல் நடக்கும்போது பார்த்து கொண்டு சும்மா இருந்திட முடியாது. மாவட்ட செயலாளர் கந்தசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சட்டையை கிழித்துள்ளனர். இது மனித உரிமைக்கு விடப்பட்ட சவால்.
போலீஸ்காரர்கள் ஊதியம் வாங்கிக்கொண்டு வேலை செய்கின்றனர். நாங்கள் கொள்கை வைத்துக்கொண்டு போராடி வருகிறோம். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும். இடமாற்றம் என்பது தண்டனை ஆகாது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, மறியல் போராட்டம் நடைபெறும். பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் வருகிற 13-ந்தேதி கண்டன போராட்டமும், அதற்கு முன்பு 12-ந்தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.