திருச்செந்தூர் அருகே மீனவர்கள் உண்ணாவிரதம் தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க கோரிக்கை

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில், கூடுதல் நிதி ஒதுக்கி தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-02-09 21:00 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில், கூடுதல் நிதி ஒதுக்கி தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூண்டில் வளைவு பாலம்

திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு ரூ.10 கோடியே 16 லட்சம் செலவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுவதாகவும், அலைகளின் சீற்றத்தால் நாட்டுப்படகுகள் ஒன்றுடன் ஒன்று உரசி சேதம் அடைகின்றன.

உண்ணாவிரதம்

எனவே மீனவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, தூண்டில் வளைவு பாலத்தை முறைப்படுத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் துறைமுக கமிட்டி சார்பில், நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

கமிட்டி தலைவர் திலக் பர்னாந்து தலைமை தாங்கினார். கமிட்டி செயலாளர் டார்லஸ் ராயன், முன்னாள் தலைவர் எடிசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீனவர் மேம்பாட்டு பேராய செயலாளர் நியூட்டன் பெர்னாந்து, தி.மு.க. வினிபிரட் முராய்ஸ், கடல் உணவு வியாபாரிகள் சங்கம் எமர்சன், மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சூசை ராயர், வெலிங்டன் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அப்பகுதி மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால், கடற்கரையில் நாட்டுப்படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்