உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக சீனாவில் பனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்து கொண்டிருக்கிறது. அதனால் சீனாவின் பெரும்பாலான பகுதிகள் உறைந்துவிட்டன. ஏன்..? ஒரு கடல் பகுதியே உறைந்துவிட்டது. அட ஆமாங்க..!, ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முற்றிலும் உறைந்திருக்கிறது. இந்த தீவை சுற்றியிருக்கும் நீல கடல், சமீபகாலமாக வெள்ளை நிறத்தில் பனி கடலாக காட்சியளிக்கிறது. அதனால் இந்த தீவில் வசிக்கும் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.