விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு தொழிலாளியின் மனைவிக்கு இழப்பீடு
விஷவாயு தாக்கி இறந்த துப்புரவு தொழிலாளியின் மனைவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கொட்டிவாக்கத்தில் உள்ள எங்கள் வீட்டில் கடந்த 2001-ம் ஆண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி நரசிம்மன் உள்பட 2 துப்புரவு தொழிலாளிகள் இறந்தனர். அப்போது இறந்தவர்கள் குடும்பத்துக்கு என் தந்தை இழப்பீடு வழங்கினார். இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நரசிம்மனின் மனைவி ஆதிலட்சுமி சென்னை மாநகராட்சியில் மனு செய்தார். இதனையடுத்து 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2016-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி நோட்டீசு அனுப்பியுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘ஆதிலட்சுமிக்கு மனுதாரர் ரூ.5 லட்சத்தையும், சென்னை மாநகராட்சி ரூ.2½ லட்சத்தையும் இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறினார்.