புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் ரகளை சென்னையில் 11 மாணவர்கள் கைது
சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு தினத்தின்போது ரகளையில் ஈடுபட்டதாக 11 மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை,
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலும், கோட்டூர்புரம் காந்தி மண்டப சாலையிலும், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இரும்பு சாலை தடுப்புகளை நடுரோட்டில் இழுத்துச்சென்று பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். காமராஜர் சாலையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
புத்தாண்டு தினத்தின்போது காந்தி மண்டப சாலையில் ரகளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் 10 பேரும், 10-வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அனைவரையும் அவர்களது கல்வி நலன் கருதி போலீசார் கடுமையாக எச்சரித்து, சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.