தமிழர் தயாரிப்பில் உருவான மராத்தி படம் ‘காவ்ட்டி’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழா
தமிழர் தயாரிப்பில் மராத்தியில் உருவான ‘காவ்ட்டி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.
மும்பை,

‘காவ்ட்டி’ திரைப்படம்
நவிமும்பை கார்கரை சேர்ந்த தொழில் அதிபர் சிவகுமாரின் ஆர்.பி. புரோடக்ஷன் நிறுவனம் முதன் முதலாக மராத்தியில் ‘காவ்ட்டி’ (கிராமத்தான்) என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளது. டைரக்டர் ஆனந்தின் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் புதுமுக நடிகர் ஸ்ரீகாந்த் பாட்டீல், புதுமுக நடிகை யோகிதா சவான் ஆகியோர் நடித்து உள்ளனர்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் ரேமோ டிசோசா கலந்துகொண்டார்.
ஒரு பாடல் வெளியீடு
நிகழ்ச்சியில் படத்தின் ஒரு பாடல் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதை தயாரிப்பாளர் சிவகுமார், இயக்குனர் ஆனந்த் ஆகியோர் வெளியிட இயக்குனர் ரேமோ டிசோசா பெற்றுக்கொண்டார்.
படத்தின் மற்ற பாடல்கள் வருகிற 14-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் படத்தின் விளம்பரதாரர்கள் காசம்அலி, சமீர் திக்ஷித், ஹரிகேஷ், கதாநாயகன் ஸ்ரீகாந்த் பாட்டீல், கதாநாயகி யோகிதா சவான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏப்ரலில் வெளியாகும்
‘காவ்ட்டி’ படத்தை தயாரித்து உள்ள தொழில் அதிபர் சிவகுமார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள கே.எம்.அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். நவிமும்பையில் அண்ணா கிரானா சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இந்த படத்திற்கு அவரே கதை, வசனமும் எழுதி உள்ளார்.
‘காவ்ட்டி’ திரைப்படம் குறித்து அவர் கூறுகையில், “கிராமத்தில் வசிக்கும் இளைஞன் நகரத்தில் வசிக்கும் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை கருவாக கொண்டது இந்த படம். கிராமத்து இளைஞர்கள் ஒரு வட்டத்துக்குள் முடங்கி விடாமல் நகரத்தில் வந்து சாதிக்க தூண்டும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது.
படத்தை பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கதை, வசனம் எழுதி உள்ளேன். இந்த படம் ரூ.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் ‘காவ்ட்டி’ படம் திரைக்கு வரும். தற்போது, வெளியிட்டுள்ள ஒரு பாடலை யூ-டியூபில் பார்த்து ரசிக்கலாம்” என்றார்.