மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து பயணியிடம் திருடியவருக்கு 5 ஆண்டு ஜெயில் மும்பை கோர்ட்டு தீர்ப்பு
மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து, பயணியிடம் திருடியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,

ரெயில்நிலையத்தில் அறிமுகம்
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி ராகுல்சிங் என்பவர் வந்திருந்தார். அங்குள்ள டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றிருந்தபோது, அவருக்கு முகமது பதான்(வயது52) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சிறிது நேரம் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் சற்று நேரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்ற முகமது பதான், 10 நிமிடங்கள் கழித்து கையில் குளிர்பானத்துடன் அங்கு வந்தார். பின்னர் அதை ராகுல்சிங்கிடம் கொடுத்து குடிக்கும்படி கூறினார். அந்த குளிர்பானத்தை ராகுல்சிங் வாங்கி குடித்தார். இதில், சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.
ஜெயில் தண்டனை
பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, அவரது பையில் இருந்த ரூ.90 ஆயிரம், 2 செல்போன்கள், பாஸ்போர்ட் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துவிட்டு அவற்றை முகமது பதான் திருடி சென்றிருந்ததை அறிந்த அவர், இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி முகமது பதானை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து செசன்ஸ் கோர்ட்டு, முகமது பதானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.