மரத்தில் கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர் பலி 2 பேர் படுகாயம்
காங்கேயம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த தொழில் அதிபர் பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் சக்தி விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 58). இதுபோல் கொடுவாய்-பழனி மெயின் ரோட்டில் வசிப்பவர் திருமலைசாமி (41). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் நிதிநிறுவன தொழில் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தொழில் சம்பந்தமாக அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கொடுவாயில் இருந்து பஸ்சில் சேலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு பாபு என்பவரை சந்தித்து பேசினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கொடுவாய்க்கு செல்ல புறப்பட்டனர்.
மரத்தில் கார் மோதியது
அப்போது பாபு, நான் உடுமலைக்கு காரில் செல்கிறேன். உங்கள் ஊர் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே நீங்கள் இருவரும் என்னுடன் காரில் வாருங்கள் வழியில் உங்களை இறக்கி விடுகிறேன் என்று கூறினார். அதைத்தொடர்ந்து பிரேம்குமார், திருமலைசாமி ஆகியோர் பாபு காரில் ஏறினார்கள்.
காரை பாபு ஓட்டிச்சென்றார். அவரது இருக்கை அருகே முன்பகுதியில் திருமலைசாமி அமர்ந்து இருந்தார். காரின் பின் இருக்கையில் பிரேம்குமார் அமர்ந்து இருந்தார். அவர்கள் கார் இரவு 10.30 மணி அளவில் காங்கேயம் அருகே உள்ள திட்டுப்பாறை என்ற இடத்தில் வந்த போது திடீரென்று பாபுவின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி ஓடியது. இதனால் அந்த பகுதியில் ஒரு வளைவில் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
ஒருவர் பலி
இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரேம்குமார் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் பாபு, திருமலைசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.