மதிய உணவு திட்ட ஊழியர்கள் 4-வது நாளாக போராட்டம்: 5 ஆயிரம் பேர் விதான சவுதாவை முற்றுகையிட முயற்சி
பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு திட்ட ஊழியர்கள் 5 ஆயிரம் பேர் 4-வது நாளாக நேற்று பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு திட்ட ஊழியர்கள் 5 ஆயிரம் பேர் 4-வது நாளாக நேற்று பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாக வந்த அவர்கள் விதான சவுதாவை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் தர்ணா
கர்நாடகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பளத்தை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும், வருங்கால வைப்புநிதி, சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் கடந்த 5-ந் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
போராட்டம் குறித்து அறிந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் சுதந்திர பூங்காவுக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, முதல்-மந்திரி சித்தராமையாவிடம் அழைத்து சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், அவர் கூறியதுபோன்று எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மதிய உணவு திட்ட ஊழியர்கள் இரவு-பகலாக சுதந்திர பூங்காவில் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், முதல்-மந்திரி சித்தராமையா தங்களிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினால்தான் போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது.
விதான சவுதாவை முற்றுகையிட முயற்சி
இந்த போராட்டத்துக்கு நேற்று சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்தது. அந்த சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் நேற்று சிட்டி ரெயில் நிலையத்தின் முன்பு திரண்டனர். பின்னர், அவர்களும் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களும் சேர்ந்து விதான சவுதாவை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது மதிய உணவு திட்ட ஊழியர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.5 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண் ஊழியர்கள் தாங்கள் கொண்டு வந்த உடைமைகள் அடங்கிய பைகளை தலையில் சுமந்தபடி சென்றனர். ஊர்வலத்தின்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கூறியதோடு, அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அத்துடன், தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் உள்ள அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தள்ளு-முள்ளு
சுதந்திர பூங்கா அருகே ஊர்வலம் சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 600 போலீசார் தடுப்பு வேலிகளை சாலையில் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, தள்ளு-முள்ளும் ஏற்பட்டது.
பின்னர், போராட்டக்காரர்கள் சுதந்திர பூங்கா முன்புள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போது, அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ‘பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிப்பது, சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை காலம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். முதல்-மந்திரி சித்தராமையா, அல்லது பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் ஆகியோர் வந்து பேசும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம். தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’ என்று ஆக்ரோஷமாக தெரிவித்தனர்.
மயக்கம்
நேற்று நடந்த போராட்டத்தின்போது மொத்தம் 7 பெண் ஊழியர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று சுதந்திர பூங்கா முன்பு உள்ள சேஷாத்திரி ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
மதிய உணவு திட்ட ஊழியர்கள் தொடர்ச்சியாக சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.