மயக்க ஊசி போட்டு நர்சிங் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது
மயக்க ஊசி போட்டு நர்சிங் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தனியார் மருத்துவமனை டாக்டர் ரவீந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.;
கோவை,
கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ரவீந்திரன்(வயது 47). எம்.பி.பி.எஸ்.டாக்டர். இவர் சிங்காநல்லூரில் ஏ.ஆர்.ஆர். என்ற மருத்துவமனை நடத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் ‘டிப்ளமோ’ நர்சிங் படித்து வருகிறார். இவர், டாக்டர் ரவீந்திரனின் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்து இருந்தார். இதேபோல் மேலும் பல மாணவிகள் இந்த மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்து இருந்தனர்.
சம்பவத்தன்று கொடைக்கானல் மாணவிக்கு சளித் தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக டாக்டர் ரவீந்திரனிடம் மாணவி மாத்திரை கேட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் சளி அதிகமாக இருப்பதால் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என கூறி இடுப்பில் ஊசி போட்டார்.
பின்னர் ‘உனக்கு ரத்தம் குறைவாக இருக்கிறது, இதற்காக மேலும் ஒரு ஊசி போட்டுக்கொள்’ என கூறி மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் மாணவி மயக்கமடைந்ததும் டாக்டர் ரவீந்திரன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்றார். அரை மயக்கத்தில் இருந்த மாணவி போராடி டாக்டரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அப்போது மாணவி மருத்துவமனை வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதைபார்த்த சக மாணவிகள் தண்ணீர் தெளித்தனர். சிறிது நேரத்திற்கு பின் சகஜ நிலைக்கு திரும்பிய மாணவி நடந்த சம்பவங்களை கூறினார். இதைக்கேட்டு சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் நடந்த சம்பவங்களை டாக்டரின் மனைவியிடம்(இவரும் ஒரு டாக்டர் ஆவார்) கூறினர். அவர் மாணவிகளிடம் ‘இனிமேல் இதுபோன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி சமாளித்தார்.
ஆனால் டாக்டர் ரவீந்திரன் இதேபோன்று பல மாணவிகளிடமும் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார், எனவே அவரால் இனிமேல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என கருதிய நர்சிங் மாணவிகள் இதுபற்றி கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் சுலேகா, உமா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் டாக்டர் ரவீந்திரனின் அத்துமீறல்களை கூறி மாணவிகள் கண்ணீர் வடித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில், கோவை மாநகர கிழக்கு பிரிவு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர் ரவீந்திரன் மீது சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தடுக்கும் ‘போஸ்கோ’ சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவை அனைத்துமகளிர் கோர்ட்டு நீதிபதி அல்லி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். டாக்டர் ரவீந்திரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.