கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 4 ரவுடிகள் கைது
சின்ன காஞ்சீபுரத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
சின்ன காஞ்சீபுரம் பகுதியில் சிலர் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டுவதாக சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த காஞ்சீபுரம் ஆனந்தஜோதி தெருவை சேர்ந்த ஆறு என்கிற ஆறுமுகம் (வயது 30), காஞ்சீபுரம் மடம் தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ் (30), அதே பகுதியை சேர்ந்த டில்லிபாபு (25), அருண்குமார் (25) ஆகிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 பட்டன் கத்திகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்த தியாகுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.