விபசார வழக்கில் 2 பேர் கைது

கூடுவாஞ்சேரியில் விபசார வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-08 21:30 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் (வயது 29), என்ற வாலிபர் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது முன்பின் தெரியாத 2 பேர் வேல்முருகன் அருகில் சென்று எங்களிடம் மும்பை அழகி இருக்கிறார் என்று கூறி விபசாரத்திற்கு அழைத்து உள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த நவுசாத் (வயது 36), சிஹாக்(27), ஆகியோர் மும்பை அழகியுடன் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் நவுசாத், சிஹாக் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையம் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மும்பை அழகியை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்