பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-02-08 22:45 GMT
காரைக்கால்,

தமிழகத்தில் அரசு பஸ்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுவையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு சாலைபோக்குவரத்து கழக பஸ்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக்கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் தமிழ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி, மின்சார கட்டணம், பஸ்கட்டணம் ஆகியவற்றை அரசு திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், ராமகிருஷ்ணன், ஜெயராமன், அப்துல் அஜீஸ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காரைக்கால் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்