சுங்குவார்சத்திரம் அருகே ஏரிக்கரையில் சிலைகள் கண்டெடுப்பு
சுங்குவார்சத்திரம் அருகே பொடவூர் ஏரிக்கரையில் கோவில் கோபுரங்களில் வைக்கப்படும் சிமெண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை பகுதியில் சில சிலைகள் சேதம் அடைந்த நிலையில் கிடந்தன. இதுகுறித்து கிராம மக்கள், சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு கோவில் கோபுரங்களில் வைக்கப்படும் பூதகி, துவாரபாலகி, மகேஸ்வரி உள்ளிட்ட சிலைகள் இருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் சிமெண்டினால் செய்யப்பட்டு தங்க நிற வர்ணம் பூசப்பட்டு இருந்தன.
உடனே சிலைகளை கைப்பற்றிய போலீசார், அவற்றை சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இந்த சிலைகள் எந்த கோவில் கோபுரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், இவற்றை ஏரிக்கரையில் வீசி சென்றது யார்? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.