பெண்கள் உள்பட 3 பேர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

ஆத்தூர் அருகே பெண்கள் உள்பட 3 பேர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை

Update: 2018-02-06 22:00 GMT
ஆத்தூர்,

ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா(வயது 65). இவர் தனது பேரன் கிருஷ்ணன்(27), பேத்தி கிருஷ்ணவேணி(20) ஆகியோருடன் முட்டல் செல்லுவதற்காக ராணிப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென கிருஷ்ணனை சரமாரியாக தாக்கியது.

இதை தடுக்க சென்ற ஜெயா, கிருஷ்ணவேணி ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கியது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் காயமடைந்த கிருஷ்ணன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்