வடமதுரை அருகே மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவர்
வடமதுரை அருகே மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மோர்பட்டியை சேர்ந்தவர் முத்துமணி (வயது 27). வேன் டிரைவர். அவருடைய மனைவி துளசிமணி (23). இவர்களுடைய மகள் பத்மாஸ்ரீ (3). முத்துமணி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முத்துமணி நேற்று காலை 9 மணியளவில் தனது வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் திடீரென ஏறினார். அந்த சமயம் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதற்கிடையே மின்கம்பத்தின் உச்சிக்கு சென்று அமர்ந்து கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் சமாதானம் செய்து பார்த்தனர். இருப்பினும் அவர், தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
பின்னர் இதுகுறித்து வடமதுரை மின்வாரிய அலுவலகத்துக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அப்பகுதிக்கு வரும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சமாதானமடைந்த முத்துமணி ஒருவழியாக மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார். அதன்பின்னரே அதிகாரிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
மேலும் அவரை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர். மின்கம்பத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.