வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
பருத்தி மூட்டைகளை இறக்கி வைக்க அனுமதி வழங்க கோரி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த பருத்தி வாரச்சந்தைக்கு விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விளை நிலத்தில் அறுவடை செய்யும் பருத்தியை மூட்டைகளாக்கி வாகனங்கள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். தற்போது பருத்தி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில விவசாயிகள் முன்னதாகவே பருத்தி மூட்டைகளை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்துக்கு கொண்டு வந்து, வாரச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி, தொழுதூர், விருத்தாசலம் பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வாகனங்களில் 500–க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை ஏற்றி கொண்டு கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு வந்தனர். அப்போது சங்க வளாக நுழைவுவாயில் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் விற்பனை சங்க அதிகாரிகளிடம் தாங்கள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகளை இறக்கவேண்டும் கதவை திறக்குமாறு கூறினர்.
அதற்கு அதிகாரிகள் வாரச்சந்தையையொட்டி கடந்த சில நாட்களாக ஏராளமான பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு, வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனை சங்க வளாகத்தில் இனிமேல் மூட்டைகளை வைக்க போதிய இடம் இல்லை என கூறி, பருத்தி மூட்டைகளை இறக்கி வைக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனிடையே விவசாயிகள் பருத்தி மூட்டைகள் ஏற்றி வந்த வாகனங்கள் அனைத்தும் விற்பனை சங்கம் செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகளை இறக்கி வைக்க அனுமதி வழங்க கோரி திடீரென வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் விற்பனை சங்க கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை செலவு செய்து பருத்தி மூட்டைகளை வாகனத்தில் எடுத்து வந்துள்ளோம் என்றும், அதனை திருப்பி எடுத்து சென்றால் எங்களுக்கு கூடுதல் செலவு ஆகும். ஆகவே இந்த முறை பருத்தி மூட்டைகளை இறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அதிகாரிகள் குடோனில் இடமில்லை. தற்போது வந்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அடுத்த வாரம் நடைபெறும் வாரச்சந்தையில் பருத்தி மூட்டைகளை இறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால், பருத்தி வாரச்சந்தையை நிறுத்தி விடுவோம் என கூறினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.