ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு தந்தை இறந்த 15-வது நாளில் மகனும் பலியான பரிதாபம்

திருவிடைமருதூர் அருகே ஆற்றில் மூழ்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார். தந்தை இறந்த 15-வது நாளில் அவர் பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Update: 2018-02-06 22:45 GMT
திருவிடைமருதூர்,

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலசாலை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஜோதி(வயது46). கொத்தனார்.

இவருடைய மனைவி வாசுகி. ஜோதி நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் இருந்து வெளியே சென்றார். இதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் ஜோதியை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றில் மூழ்கி ஜோதி பிணமாக மிதந்தார். ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய ஜோதி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சோகம்

இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜோதியின் தந்தை கணபதி கடந்த 15 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்தார். தந்தை இறந்த 15 நாட்களில் அவரது மகனும் பலியான சம்பவம் திருபுவனம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்