புதுச்சத்திரம் அருகே பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சிதம்பரம் அருகே படிக்காமல் டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2018-02-06 21:13 GMT
கடலூர்

சென்னை தண்டையார்பேட்டை திடீர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி உஷாராணி(வயது 40). இவர்களது மகள் சவுமியா(17). இவர் சிதம்பரம் அருகே உள்ள வெளிங்கராயன்பேட்டையில் உள்ள உறவினர் கீதா என்பவரது வீட்டில் தங்கியிருந்து, சாமியார்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சவுமியா படிப்பில் சரிவர கவனம் செலுத்தவில்லை. மாறாக பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் டி.வி. பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சவுமியாவின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.

இது குறித்து கீதா, சென்னையில் உள்ள உஷாராணிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உஷாராணி, செல்போன் மூலமாக சவுமியாவை தொடர்பு கொண்டு டி.வி. பார்க்காமல் ஒழுங்காக படி என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சவுமியா, நேற்று முன்தினம் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீதா குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சவுமியாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சவுமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உஷாராணி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்