குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
செந்துறை அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங் களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.;
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தெற்கு பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் 100 நாள் வேலை உறுதி திட்ட அடையாள அட்டை மற்றும் காலிக்குடங்களை தோரணங்கள் போல் கட்டி தொங்க விட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மின்மோட்டார் உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.