வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.2 லட்சம் பறிமுதல்
நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் நாமக்கல்-சேலம் புறவழிச்சாலையில் காதப்பள்ளி என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகன பதிவு, தகுதிச்சான்று புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏராளமான லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோல் சமீபகாலமாக மானிய விலை ஸ்கூட்டர் வாங்க, பெண்கள் அதிக அளவில் ஓட்டுனர் உரிமம் பெற வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில், மாலை 6.15 மணிக்கு அதிரடியாக நுழைந்து வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த மேஜை மற்றும் பீரோவுக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் கிடந்தது.
அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அந்த பணம் தொடர்பாக அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பணத்துக்கு முறையான கணக்கு காட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனை இரவு 9 மணிக்கு பிறகும் நீடித்தது. அதுவரை வட்டார போக்குவரத்து அதிகாரி துரைசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு சேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்து உள்ளோம். தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். சோதனையின் முடிவில் தான் கணக்கில் வராத பணம் எவ்வளவு கைப்பற்றி உள்ளோம் என்பது தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை முடிவில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.