அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் டிரைவர்கள் கைது
நாகூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகூர்,
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் நாகூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடம்பங்குடி அருகே சென்று கொண்டிருந்த 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், லாரியை ஓட்டி வந்தது திருவாரூர் குறும்பேரி பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் முத்து (வயது38), அதேபகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜ்குமார் (25) என்றும், இவர்கள் திருவாரூரில் உள்ள குறும்பேரியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முத்து, ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, மணல் ஏற்றி வந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து நாகூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.