அந்தியூர் வனக்கோவில் பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
அந்தியூர் வனக்கோவில் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு,
அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி வனக்கோவிலுக்கு பக்தர்கள் சிலர் பொங்கல் வைப்பதற்காக நேற்று காலை சென்றார்கள். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஒருவர் பிணமாக தொங்கினார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் உடனே அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மரத்தில் இருந்து இறக்கி, பிணமாக கிடந்தவரின் பாக்கெட்டை சோதனை செய்தார்கள். அப்போது சரவணன், ஓங்காளியம்மன்கோவில் வீதி, கொல்லங்கோவில், தகப்பனார் பெயர் மாதன் என்ற முகவரியும், ஒரு செல்போன் எண்ணும் இருந்தது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டு உறவினர்களை வனக்கோவிலுக்கு வரவழைத்தார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்களும் பிணமாக தொங்கியது சரவணன்தான் என்று உறுதி செய்தார்கள். மேலும் சரவணன் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்ததும் தெரிந்தது. அதன்பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்கொலை செய்துகொண்ட சரவணனுக்கு ரேவதி (30) என்ற மனைவியும், மதுமிதா (10), திவ்யா (8) என்ற மகள்களும் உள்ளனர். அவர்கள் சரவணனின் உடலை பார்த்து கதறி துடித்தார்கள்.
கொல்லம்பாளையத்தை சேர்ந்த சரவணன் புதுப்பாளையம் வனக்கோவிலுக்கு ஏன் வந்தார்? அவர் மரத்தில் தூக்குப்போட பயன்படுத்திய துப்பட்டா அவருடைய மனைவியுடையதா? அல்லது வேறு யாருடையது? அவர் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன? என்று அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.