தனியார் சர்க்கரை ஆலை முன்பு 9–ந் தேதி காத்திருப்பு போராட்டம் கரும்பு வளர்ப்போர் சங்கம் முடிவு
சத்தியமங்கலம் அருகே தனியார் சர்க்கரை தாளவாடி பகுதி கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிட்டு அதனை வழங்கி வருகிறார்கள்.
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு தாளவாடி பகுதி கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிட்டு அதனை வழங்கி வருகிறார்கள். கடந்த 2013–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டு வரை டன் ஒன்றுக்கு ரூ.1,325 வழங்க வேண்டும் என்று கரும்பு ஆலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அரசு நிர்ணயித்த விலையை வழங்காமல் குறைவான பணத்தை வழங்குவதாக தாளவாடி விவசாயிகளிடம் இருந்து கையெழுத்து போட்ட மனுவை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் கையெழுத்திட்ட மனுவை வழங்க வேண்டும் என்று தாளவாடியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கரும்பு வளர்ப்போர் சங்க கூட்டம் சத்தியமங்கலத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க துணைத்தலைவர் கே.என்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் எஸ்.முத்துசாமி, நிர்வாகி அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ‘தாளவாடி விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கிய மனுவை திரும்ப கொடுக்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் வருகிற 9–ந் தேதி தனியார் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது. இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது எனவும்,’ முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.