மானாமதுரையில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மானாமதுரையில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் புகுந்து 18 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் பணத்தை காரில் வந்த மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.;
மானாமதுரை,
மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது ஆனந்தவல்லி அம்மன் நகர். இங்கு தற்போது குடியிருப்புகள் அதிகரித்து உள்ளது. இங்கு, பரமக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வரும் அந்தோணிராஜ் என்பவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். நேற்று காலை அந்தோணிராஜ் வழக்கம்போல பரமக்குடி அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி மற்றும் தாயார் அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அந்தோணிராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீடுபுகுந்து, பீரோவை திறந்து அதில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
பின்னர் வீடு திரும்பிய அந்தோணிராஜின் மனைவி, வீடு திறக்கப்பட்டு நகை-பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வந்த போலீசார் வீட்டில் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து அந்தோணிராஜ் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசார் முதற்கட்டமாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில், மர்ம கும்பல் ஒரு காரில் வந்து இறங்குவதும், பின்னர் நகை-பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது. பின்னர் அவர்களது அடையாளங்களை வைத்து மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.