அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒக்கலிகர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால், மாவட்ட துணைத்தலைவர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் ரங்கசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-
காட்டு யானை, காட்டுப்பன்றி, மயில், மான், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. எனவே வன விலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும்.
விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் வன விலங்குகளை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்ட வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை அரசு திரும்ப பெறுவதோடு, காளிங்கராயன் திட்டத்துடன் சேர்த்து அத்திக்கடவு- அவினாசி திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.