ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் பீடித்தொழிலாளர்கள் முற்றுகை இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று பீடித்தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தினர்.
ஆலங்குளம்,

தாலுகா அலுவலகம் முற்றுகை
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பீடித்தொழிலாளர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பீடித்தொழிலாளர்கள் 298 பேருக்கு இலவச பட்டா வழங்க அதற்கான இடத்தை அதிகாரிகள் காண்பித்துள்ளனர். ஆனால் அந்த இடத்தை அளவு செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பீடி தொழிலாளர்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
பீடித்தொழிலாளர் சங்கத்தின் ஆலங்குளம் தாலுகா தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் அழகுசுந்தரி முன்னிலை வகித்தார். பீடித்தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து மாவட்ட தலைவர் ராஜாங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் குணசீலன் ஆகியோர் பேசினார்கள். கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் ஆலங்குளம் தாசில்தார் சுப்புராயலு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தற்போது 160 இலவச பட்டா வழங்குவதாகவும், நிலங்களை அளவு செய்வதாகவும் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.