கருகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு
நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு கருகிய நெற்பயிர்களுடன் வந்த விவசாயிகள், குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். நாங்குநேரி அருகே உள்ள முனைஞ்சிபட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கருகிய நெற்பயிர் களுடன் வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியில் பெரியமுனைஞ்சி, துத்திகுளம், தேவர்குளம் என 3 குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு மணிமுத்தாறு அணையின் 4-வது ரீச்சில் உள்ள 2-வது மடையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது குளங்களில் தண்ணீர் இல்லாததால், நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. எனவே எங்கள் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன் குளம், வேட்டை ராஜகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் உள்ள குளங்களுக்கு மணிமுத்தாறு 4-வது ரீச்சில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் மாடசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “மேலமருதப்பபுரம், அண்ணாமலைபுதூர், நொச்சிகுளம், குறிச்சிகுளம், சண்முகாபுரம் ஆகிய ஊர்களில் உள்ள விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவில்லை. எங்கள் பகுதி விவசாயிகளையும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
சிவகிரி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி சண்முகசுந்தரம் தனது மனைவி மாரியம்மாள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், “சிவகிரியை சேர்ந்த ஒரு சிலரிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி இருந்தேன். நான் வாங்கிய பணத்துக்கு மேல் வட்டி கட்டிவிட்டேன். ஆனால் எனது வீட்டை அபகரித்து விட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டுதர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
டி.டி.வி.தினகரன் அணி சார்பில் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அசன் அலி தலைமையில் அந்த அணியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாநகர பகுதியில் சுவர்களில் விளம்பரம் செய்து வருகிறோம். ஆனால் சில அதிகாரிகள் ஜெயலலிதா பெயரை விளம்பரத்தில் இருந்து அழித்து விட்டனர். ஜெயலலிதா பெயருடன் விளம்பரம் செய்ய அனுமதிக்க வேண்டும்“ என்று கூறி இருந்தனர்.
சமாஜ்வாடி கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நம்பிராஜன் தலைமையில் நாங்குநேரி அருகே உள்ள இறைப்புவாரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மாணவர்கள் நாங்குநேரி சென்று படிக்கிறார்கள். எங்கள் ஊருக்கு 2 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும்“ என்று கூறி இருந்தனர்.
பேட்டை பகுதியில் உள்ள மெத்தை தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பேட்டை பகுதியில் இயங்கி வந்த மெத்தை தொழிற்சாலை திடீரென்று மூடப்பட்டது. இதனால் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக அந்த தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தனர்.