கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை சொத்து தகராறு காரணமா? போலீசார் விசாரணை
தஞ்சை அருகே கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
தஞ்சாவூர்,
தஞ்சை விளார் சாலை அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் சரவணன்(வயது 45). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவருடைய பெயர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளது. தற்போது இவர், பூச்சந்தையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர்களது குடும்பத்திற்கு சொந்தமாக கடைகள் உள்ளன. இதனை உறவினர்கள் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும், அதில் சரவணன் மட்டும் கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த சொத்தை தனக்கு தருமாறு சரவணன் கேட்டுள்ளார். இதனால் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை சரவணன் தஞ்சையை அடுத்த விளார் அய்யனார் கோவில் எதிரே உள்ள காலிமனையில் பிணமாக கிடப்பதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது சரவணன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட சரவணனுக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. அந்த தகராறில் இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.