மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூண்டியில் மதுக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் திருப்பூண்டி கடைத்தெரு அருகே இருந்த மதுக்கடையை மூடகோரி அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அந்த இடத்தில் மதுக்கடை திறக்கப்பட உள்ளதாகவும், அதற்காக தளவாட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மனித நேய மக்கள் கட்சியினர் நேற்று திருப்பூண்டி கடைத்தெருவிற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.இப்ராகிம், கிளை செயலாளர் சர்புதீன் முன்னிலை வகித்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் ஹாஜாஅலாபுதீன், முஸ்லிம் முன்னேற்ற கழக கிளை செயலாளர் இப்ராகிம், ஒன்றிய செயலாளர் ஷாகுல்அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது திருப்பூண்டியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.