கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி
நில அபகரிப்பு புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு வரும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.
ஆனால் பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தைச்சேர்ந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் விஷபாட்டிலை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு கூட்டரங்கில் இருந்து வெளியே வந்த போது, தான் மறைத்து வைத்திருந்த விஷபாட்டிலை திறந்து விஷத்தை குடித்தார்.
இதனை கவனித்த பொதுமக்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவந்து உள்ளது. அதாவது அவருடைய நிலத்தை 3 பேர் அபகரித்து கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கிருஷ்ணமூர்த்தி சாகுபடி செய்திருந்த முருங்கை மரங்களை அழித்து மிளகாய் மற்றும் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர்.
இது பற்றி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்திலும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்துள்ளார். ஆனால் இது சிவில் சம்பந்தமானதால் நீதிமன்றத்தில் சென்று நியாயம் தேடிக்கொள்ளுங்கள் என்று போலீசார் கூறினார்களாம். அதனால் விரக்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரிடம் நேற்று மீண்டும் மனு கொடுத்து விட்டு விஷம் குடித்து உள்ளார்.
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.