ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம்; கைதான துணைவேந்தருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? பலரது பெயரை பட்டியலிட்டு விசாரணை
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட விவகாரத்தில் ரூ.40 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.;
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட விவகாரத்தில் ரூ.40 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. கைதான துணைவேந்தர் கணபதிக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது குறித்து அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரது பெயரை பட்டியலிட்டு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த சனிக்கிழமை காலை தனது வீட்டில் வைத்து ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். உதவி பேராசிரியர் பணிக்கு சுரேஷ் என்பவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றபோது சாதாரண உடையில் தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு பணம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கைதானார்.
துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்த வந்ததும், துணைவேந்தர் மனைவி சொர்ணலதா உடனே, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 22 நோட்டுகளை மறைத்துவிட்டு 28 நோட்டுகளை கிழித்து கழிவறைக்குள் போட்டு தண்ணீர் ஊற்றியதாக தெரியவந்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார், துப்புரவு தொழிலாளர்களின் உதவியுடன் கழிவறையை உடைத்து கிழிந்த நிலையில் இருந்த 28 நோட்டுகளையும்,மறைத்து வைத்திருந்த 22 ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். சொர்ணலதா குற்றவியல்(கிரிமினாலஜி) படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் தடயங்களை அழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி உள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் இந்த முறைகேடுகளுக்கு முக்கிய இடைத்தரகராக இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த லஞ்ச வழக்கில் முதல் கட்டமாக மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் முதல் குற்றவாளியாக துணைவேந்தர் கணபதி, இரண்டாவது குற்றவாளியாக பேராசிரியர் தர்மராஜ், மூன்றாவது குற்றவாளியாக தொ லைதூர கல்வி இயக்குனர் மதிவாணன், 4-வது குற்றவாளியாக துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதா சேர்க்கப்பட்டுள்ளனர். சொர்ணலதா மீது ஆதாரத்தை அழிக்க முயன்றதாக 201-வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.துணைவேந்தராக கடந்த 2016-ம் ஆண்டு கணபதி பொறுப்பேற்ற நாள் முதல் இந்த மாதம் வரை சுமார் 2 ஆண்டுகளில் அவர் 82 பேரை பல்வேறு பதவி இடங்களுக்கு பணி நியமனம் செய்துள்ளார்.
உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்தில் 82 பேரிடம் மட்டுமின்றி உதவி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு, பேராசிரியர் பணியிடம் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் நியமனம் ஆகியவற்றிலும் கணபதி முறைகேடுகள் செய்ததாக கூறப்படுகிறது. இவை தவிர பாரதியார் பல்கலைக்கழகத்தில் எஸ்.சி, எஸ்.டி. இட ஒதுக்கீட்டின் கீழ் செய்யப்பட்ட பணி நியமனங்களிலும் கணபதி தில்லுமுல்லு செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததுடன், ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்று இருப்பதாக முதல்கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது. எனவே நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
கைதான துணைவேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்பு போலீசில் கூறும்போது, திட்டமிட்ட சதியில் தான் சிக்கவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பின்னணி இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் சிலரது பெயரையும் குறிப்பிட்டதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் துணைவேந்தரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? அரசியல் பிரமுகர்களின் பங்கு என்ன? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயர் பட்டியலை வைத்து விசாரித்து வருகிறார்கள். கணபதியிடம் தொடர்பு கொண்டவர்களின் செல்போன் எண்களின் விவர பட்டியல் சேகரிக்கப்பட்டு, எந்தந்த நேரங்களில் பேசியுள்ளனர்? என்னன்ன விவரங்கள் பேசியுள்ளனர்? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
துணைவேந்தர் கணபதி நியமனம் செய்த 82 பேராசிரியர் பணியிடங்கள் மீது அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த பணியிடங்களை உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதுபோல பல்கலைக்கழக மூத்த பேராசிரியர்களும் இந்த களங்கத்தை துடைக்க வேண்டுமானால் தற்போது பணியில் இருக்கும் ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 82 பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை உத்தரவின்பேரில் கடந்த 6 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது லஞ்சம் வாங்கி கைதான வழக்கு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துணைவேந்தரின் உதவியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, பல்கலைக்கழகத்தில் கேண்டீன் நடத்துபவர் ஆகிய 3 பேரும் மோசடிக்கு துணைபோனார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துணைவேந்தர் கணபதி ஊட்டி உள்ளிட்ட இடங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய மகனும், மகளும் டாக்டருக்கு படித்து வருகிறார்கள். இவர்களுக்காக திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் 5 மாடியில் பிரமாண்டமாக மருத்துவமனை கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.
லஞ்சப்புகாரில் அரசு அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்படுவார்கள். துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் மீது பணி ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தஅறிக்கையின் அடிப்படையில் பணி இடைநீக்கத்துக்கான உத்தரவை கவர்னர் மாளிகை பிறப்பிக்கும் என்று தெரிகிறது.
பாரதியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம் தோண்ட, தோண்ட பூதாகரமாக கிளம்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.