தூக்குப்போட்டு தற்கொலை: தொழிலாளி உடலை பரிசோதனை செய்ய தாமதமானதால் போராட்டம்
தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தற்கொலை செய்த தொழிலாளியின் உடலை பரிசோதனை செய்ய தாமதம் செய்ததால் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தேவகோட்டை,
தேவகோட்டை கண்டதேவி சாலையில் வசித்து வந்தவர் மணிகண்டன்(வயது 40). இவர் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் இருந்துவந்தது. இதனால் அவருக்கும், மனைவி கமலாதேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மணிகண்டன், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இஸ்சாத் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியின் உடலை கைப்பற்றி தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனது. இதனால் அவரது உறவினர்கள் டாக்டர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆஸ்பத்திரி டாக்டர் செந்தில்குமார் கூறும்போது, பிரேத பரிசோதனை அறை பணியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவரும் விடுமுறை எடுத்ததால், காரைக்குடியில் இருந்து பணியாளர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.